இந்தியாவில் தனது இந்தியக் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வரும் ரஷ்யப் பெண் ஒருவர், தன்னோடு வாழும்போது தனது இந்தியக் குடும்பத்தினர் அனுபவிக்கும் 11 வித்தியாசமான கலாச்சாரப் பழக்கவழக்கங்கள் குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் விவாதமாக மாறியுள்ளது.

அனஸ்தேசியா ஷாரோவா (Anastasia Sharova) என்ற அந்தப் பெண், இந்தியாவில் கலாச்சார வேறுபாடுகளைத் தான் எப்படிச் சமாளிக்கிறேன் என்று பலரும் தன்னிடம் கேட்பதாகவும், ஆனால் தனது குடும்பத்தினரின் பார்வையில் இருந்து இந்த விவகாரத்தைப் பார்ப்பதுதான் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டு இந்த வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Anastasia Sharova (@anasharovasingh)

அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள 11 முக்கிய பழக்கவழக்கங்கள் இதோ:

உணவுப் பழக்கம்: ரஷ்யாவில் பொதுவாக முன்பே சமைத்து வைத்த உணவையோ அல்லது சூப்பையோ தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வரை சாப்பிடுவது வழக்கம்; ஆனால் இந்தியாவில் தினமும் புதிதாகச் சமைத்த உணவைச் சாப்பிடுவதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

முக பாவனை (Slavic stare): தான் சாதாரணமாக இருக்கும்போது கூட முகத்தை மிகவும் கடுகடுப்பாக வைத்திருப்பதாகத் தனது இந்தியக் குடும்பத்தினர் பயப்படுவதாகவும், அது தங்களின் இயல்பான முக பாவனைதான் என்பதைத் தான் அடிக்கடி விளக்க வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

வெளிப்படையான பேச்சு: எதற்காவது ‘இல்லை’ அல்லது ‘என்னால் செய்ய முடியாது’ என்று சொல்ல வேண்டும் என்றால், அதனைத் தான் மிகவும் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சொல்லிவிடுவேன்; ரஷ்யாவில் இது சாதாரண விஷயம் என்றாலும் இந்தியாவில் இது சில சமயம் முரட்டுத்தனமாகப் பார்க்கப்படுகிறது.

இதர பழக்கங்கள்: திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வது, வீட்டிற்குள் வருபவர்களுக்கு உடனடியாக உபசரிப்பு வழங்காதது, ஆசிரியர்கள் உட்பட பெரியவர்களைப் பெயர் சொல்லி மரியாதையுடன் அழைப்பது, ரஷ்யாவில் ஆண்-பெண் ஒன்றாகச் சானா (Sauna) குளியல் செல்வது, சந்திப்புகளை முன்கூட்டியே திட்டமிடுவது, குடிப்பழக்கத்திற்கு முன் நீண்ட உரை நிகழ்த்துவது, வீட்டு வேலைக்கு ஆட்களை வைக்காதது மற்றும் அண்டை வீட்டாருடன் அதிகமாகப் பழகாமல் இருப்பது போன்ற பல வித்தியாசங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.

இருப்பினும், தங்களுக்குள் இருக்கும் வித்தியாசங்களை விட ஒற்றுமைகளே அதிகம் என்று அவர் தனது பதிவை நெகிழ்ச்சியோடு முடித்துள்ளார். இந்த எளிய மற்றும் எதார்த்தமான வீடியோவைப் பார்த்த பல இந்திய நெட்டிசன்களும், உணவைத் தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் தாங்களும் ஒரு ரஷ்யரைப் போலத்தான் வாழ்ந்து வருவதாக மிகவும் சுவாரஸ்யமாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் படுவேகமாகப் பகிரப்பட்டு வரும் இந்த லேட்டஸ்ட் செய்தி தற்பொழுது இணையம் எங்கும் செம வைரலாகி வருகிறது.