தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக பெற்றுள்ள மாபெரும் வெற்றி மற்றும் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் குறித்து, மூத்த நடிகர் சிவக்குமார் தனது கருத்துக்களை மிகவும் ஓப்பனாகவும் எமோஷனலாகவும் பகிர்ந்துள்ளார். தமிழ்நாட்டில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றின் ஆட்சி மக்களுக்குப் பிடிக்காத காரணத்தினால்தான், தற்பொழுது மக்கள் தங்களது மொத்த நம்பிக்கையையும் விஜய் மீது வைத்து அவருக்கு வாக்களித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “மக்கள்தான் எப்போதும் நீதிபதிகள்; அவர்கள் வழங்கிய இந்த மாபெரும் தீர்ப்பை நாம் அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். முதலமைச்சர் விஜய் மக்களுக்குக் கண்டிப்பாக நல்லது பண்ணுவார் என நாம் முழுமையாக நம்புவோம்” என்றும் சிவக்குமார் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். திரையுலகின் மிக மூத்த மற்றும் நேர்மையான மனிதராகப் பார்க்கப்படும் சிவக்குமாரின் இந்த அதிரடிப் பேட்டி, தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு, அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
