மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில், லோக்கல் ரயிலின் பெண்கள் பெட்டிக்குள் ஒரு நபர் அத்துமீறி நுழைந்து, சக பயணிகள் பலமுறை கூறியும் வெளியேற மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நபர் மிகவும் ஆக்ரோஷமாகச் செயல்பட்டதோடு, ரயிலிலிருந்து இறங்கும் போது ஒரு பெண் பயணியைத் தள்ளியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அந்தப் பெண் பயணிகள் அவரை வெளியேறச் சொல்லிக் கெஞ்சியும், அருகிலிருந்த பொதுப் பெட்டியில் இருந்த ஆண்கள் எச்சரித்தும் அவர் அதைக் கண்டுகொள்ளாமல் பிடிவாதமாக இருந்தது பயணிகளிடையே அச்சத்தை உண்டாக்கியது.

 

View this post on Instagram

 

A post shared by Tulika Jain (@_tulikajain_)

“>

இந்தச் சம்பவத்தின் போது, உதவிக்காக ரயில்வே ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்பு கொள்ள முயன்றும் பலன் கிடைக்கவில்லை என்றும், பெட்டியில் இருந்த அவசரக்கால டாக்-பேக் வசதி செயல்படவில்லை என்றும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் மும்பை புறநகர் ரயில்களில் பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் சூழலில், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அவசரக்கால நடவடிக்கைகள் செயல்படாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.