உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாமியாரின் இறுதிச்சடங்கிற்குச் சென்ற மருமகன், ஆற்று முதலையிடம் சிக்கிப் பலியான கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அம்மாநிலத்தின் சரயூ நதிக்கரையில் தனது மாமியாரின் இறுதிச்சடங்கு காரியங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்துவிட்டு, கைகளைக் கழுவுவதற்காக 30 வயதான தீபக் என்ற மருமகன் ஆற்று பகுதிக்குச் சென்றுள்ளார்.

அப்போது நதிக்குள் மறைந்திருந்த முதலை ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் தீபக்கைக் கவ்விக்கொண்டு ஆழமான தண்ணீருக்குள் இழுத்துச் சென்று மறைந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அலறியடித்தபடி போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து ஆற்றில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நீண்ட தேடுதலுக்குப் பிறகு, விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் தீபக் உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாமியாரின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த மருமகனே முதலையிடம் சிக்கி உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவம் அங்கிருந்தோரை நிலைகுலையச் செய்துள்ளது.