சீனாவில் நடைபெற்ற அரசு விருந்து ஒன்றில், எலோன் மஸ்க்கிற்குப் பின்னால் நின்றிருந்த பெண் பணியாளர், உண்மையில் சீன ராணுவத்தின் உயர் அதிகாரி என்று ஜெனிபர் ஜெங் என்ற சமூக ஆர்வலர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விருந்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள அவர், அந்தப் பெண் சீனாவின் பி.எல்.ஏ கவுரவப் படைப் பிரிவைச் சேர்ந்த மேஜர் செங் செங் என்று அடையாளம் காட்டியுள்ளார்.
மேலும் அவர் தனது சீருடை அணிந்திருக்கும் புகைப்படங்களையும், விருந்தின் போது பணியாளர் உடையில் இருக்கும் புகைப்படங்களையும் ஒப்பிட்டு, சீனா அமெரிக்க பிரமுகர்களை உளவு பார்ப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
💥Explosive! We found out who she is, too!
At the CCP’s state banquet honoring President Trump @realDonaldTrump, standing next to Elon Musk @elonmusk was Cheng Cheng (程诚), a member of the Chinese Communist Party, a battalion commander in the PLA Honor Guard Ceremonial Brigade… https://t.co/Xsrk4QKuiM pic.twitter.com/1SMKJI1Mye
— Inconvenient Truths — Jennifer Zeng Reports (@jenniferzeng97) May 20, 2026
“>
இதனால் சீன அரசாங்கமும் இதுவரை இதற்கு எந்தவித மறுப்போ அல்லது விளக்கமோ அளிக்கவில்லை. கடந்த காலங்களில், அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் தொழில்நுட்பத் தலைவர்களைக் குறிவைத்து சீனா இத்தகைய மறைமுக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகப் பல்வேறு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்து வந்துள்ளனர். இந்தச் சூழலில், ஜெனிபர் ஜெங்கின் இந்தக் குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
