சென்னை மாநகராட்சியின் மே மாதத்திற்கான மாமன்றக் கூட்டத்தை நடத்துவதில் தற்போது புதிய குழப்பமும், கேள்விகளும் எழுந்துள்ளன. பொதுவாக இத்தகைய முக்கியக் கூட்டங்களை நடத்துவதற்கு முன்பாக முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களைச் சந்தித்து முறைப்படி அனுமதி பெற வேண்டும். ஆனால், சென்னை மேயர் பிரியா அவர்கள் தனக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தைக் காட்டி, இதுவரை முதல்வர் விஜய்யை நேரில் சந்திக்காமல் தவிர்த்து வருகிறார். இதனால், மே மாதத்திற்கான மாநகராட்சி கூட்டம் திட்டமிட்டபடி நடக்குமா என்ற பெரிய கேள்விக்குறி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

​ஒருவேளை முதலமைச்சர் தலைமையிலான அரசிடம் முறையான அனுமதி பெறாமல் மேயர் பிரியா மாநகராட்சி கூட்டத்தை நடத்தினால், அது தேவையற்ற நிர்வாகச் சிக்கல்களை உருவாக்கும் எனப் பேசப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அப்படி அனுமதி பெறாமல் நடத்தப்படும் கூட்டத்தில் அரசுக்கு எதிராக ஏதேனும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால், அது மாநகராட்சி அதிகாரிகளைப் பெரிய சட்டச் சிக்கலில் மாட்டிவிடும் என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இதனால் மேயர் பிரியா முதல்வர் விஜய்யை உடனே சந்திப்பாரா அல்லது கூட்டம் தள்ளிப்போகுமா என்ற பரபரப்பு சென்னை அரசியல் களத்தில் தொற்றிக் கொண்டுள்ளது.