2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வியின் அதிரடி எதிரொலியாக, திமுக தனது பாரம்பரிய அரசியல் பாணியை உடைத்தெறிந்துவிட்டு, தற்போதைய ‘ஜென் ஜி’ (Gen Z) தலைமுறைக்கேற்ற மார்டன் அரசியலுக்கு மாறத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.

தேர்தல் வீழ்ச்சிக்குப் பிறகு டெக்னாலஜியையும், சமூக வலைதளங்களையும் மிக உச்சக்கட்டமாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ள திமுக தலைமை, கட்சியில் உள்ள ஒவ்வொரு நிர்வாகியும், தொண்டரும் இனி ஒரு தனித்துவமான ‘இன்ஃப்ளூயன்ஸராக’ (Influencer) மாற வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

காலம் காலமாகத் தமிழக அரசியல் களத்தில் முக்கியப் பங்கு வகித்த ‘டீக்கடை அரசியலை’ அப்படியே டிஜிட்டல் தளங்களுக்குக் கொண்டு சென்று, சோசியல் மீடியாக்களில் தங்களது அரசியல் கருத்துக்களைப் பேச வேண்டும் என்றும், புதிய தலைமுறையைக் கவரும் வகையில் விவாதங்களை முன்வைக்க வேண்டும் என்றும் அறிவாலயம் ஸ்ட்ரிக்ட்டான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தவெகவின் புதிய டிஜிட்டல் அரசியல் பாய்ச்சலுக்கு டஃப் கொடுக்கும் வகையில், திமுக எடுத்துள்ள இந்த ‘டெக்’ அவதாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய ட்ரெண்டை உருவாக்கியுள்ளது.