கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பிரபல திமுக முக்கியப் புள்ளியான டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம், அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளது கொங்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த அவர், நேற்று (மே 15) தனது ஆதரவாளர்களுடன் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்திற்குச் சென்று, தவெக மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் தங்களை இணைத்துக் கொண்டார்.
“இத்தனை காலம் திமுகவில் உண்மையாக உழைத்தும் எனக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை; அதனால்தான் நேர்மையான பாதையில் பயணிக்கும் தளபதி விஜய்யின் தவெக ஆட்சியில் இணைந்து மக்கள் பணியாற்ற வந்துள்ளேன்” என சண்முகசுந்தரம் ஓப்பனாகப் பேசியுள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் திமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் தவெக நோக்கிப் படையெடுப்பது, ஆளுங்கூட்டணி வட்டாரத்தில் பலத்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டேன்; மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 76 ஆயிரம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன்” – தேர்தலில் போட்டியிட திமுகவில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் தவெகவில் இணைந்த டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் பேட்டி#Sengottaiyan |… pic.twitter.com/Wn0BwSA7xJ
— PttvOnlinenews (@PttvNewsX) May 16, 2026
“>
