தமிழக வெற்றி கழகம் மீது இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ், சிபிஐ, விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் இதுவரை ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தற்போது மன்னார்குடி எம்எல்ஏ காமராஜூம் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அனைவருமே ஆளுநர் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் பாஜக தமிழ்நாட்டில் புகுந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு பாஜக எம்எல்ஏவான போஜராஜன் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிப்பதாக அறிவித்த நிலையில் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி வாக்கெடுப்பிலிருந்து விலகி நிற்பதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மமக எம்எல்ஏ ஜவஹருல்லா தமிழக வெற்றி கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதேபோன்று மஜக எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, உதய சூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற கொமதேக கட்சியின் எம்எல்ஏ நித்யானந்தமும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிர்ப்பை தெரிவிப்பதாக கூறினார். அதிமுகவில் 47 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளோம். கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருப்பது இயல்புதான். ஆனால் ஒரு தரப்பு முதலமைச்சருக்கு ஆதரவு கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். தமிழக வெற்றி கழகம் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை அதிமுக எதிர்க்கிறது அதிமுகவை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் எதிர்பார்கள் என்றார். மேலும் இதுவரை தமிழக வெற்றிக் கழகத்திற்கு 116 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தப்புமா இல்லையா என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.
