தமிழக அரசியலில் ‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ நெருங்கி வரும் வேளையில், அமமுக (AMMK) கட்சியில் பெரும் பூகம்பம் வெடித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-விற்கு ஆதரவளிக்கும் டிடிவி தினகரனின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.

“எடப்பாடி பழனிசாமியின் பிடியிலிருந்து அதிமுக-வை மீட்கவே தனிக்கட்சி தொடங்கினோம், ஆனால் இப்போது அதே துரோகத்தின் வழியில் தினகரன் நடக்கிறார்” எனச் சீறிய செந்தில்நாதன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகியுள்ளார்.

ஒரு பக்கம் தவெக அரசுக்கு ஆதரவு, மறுபக்கம் அதிமுக-விற்குள்ளேயே பிளவு என அரசியல் களம் தகிக்கும் நிலையில், தினகரனின் வலதுகரமாக இருந்த மாவட்டச் செயலாளரே கட்சியை விட்டு வெளியேறியிருப்பது அமமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.