சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள், காண்போரை உறைய வைத்துள்ளன. அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பைக் அப்படியே தூக்கி வீசப்பட்டு, தரையில் விழாமல் மின்கம்பத்தின் மேல்பகுதியில் சிக்கிக்கொண்டது.

இந்த விபத்தின் கோரத்தைப் பார்த்தவர்கள் எவரும் வாகன ஓட்டி உயிர் பிழைத்திருப்பார் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால், விதியின் விளையாட்டாக அந்த இளைஞர் ஒரு சில காயங்களுடன் இந்த கோர விபத்திலிருந்து மிராக்கிளாக உயிர் தப்பியுள்ளார்.

“>

மேலும் விபத்து நடந்த அடுத்த நொடியே அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்து அந்த இளைஞரை மீட்டனர். பைக் மின்கம்பத்தின் உச்சாணிக் கிளையில் சிக்கித் தொங்குவதைப் பார்த்த உள்ளூர் மக்கள், “இது நிஜமா அல்லது சினிமா படப்பிடிப்பா?” என்று வியக்கும் அளவிற்கு விபத்தின் தீவிரம் இருந்தது.

இந்நிலையில் அதிவேகமே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. “தலைக்கவசம் அணிந்திருந்ததே அந்த இளைஞரின் உயிரைக் காத்தது” என்று அங்கிருந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எமன் வீட்டு வாசலுக்குச் சென்று திரும்பிய அந்த இளைஞரின் வீடியோ, தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.