பீகார் மாநிலம் கட்டிகார் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட ஒரு பகீர் வீடியோ இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் தன்னிடம் இருக்கும் வெள்ளரிக்காய்களுக்குப் பச்சை நிற பெயிண்ட் போன்ற திரவத்தை பூசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அருகிலேயே மற்றொரு பெண், வெள்ளரிக்காய்களைத் தண்ணீரில் கழுவி கொடுக்க, அதை வாங்கி அந்தப் பெண் பச்சை நிறக் கரைசலில் நனைத்து எடுக்கிறார். சாதாரண வெள்ளரிக்காய்க்கும், அந்தச் சாயத்தில் நனைக்கப்பட்ட வெள்ளரிக்காய்க்கும் இடையே உள்ள வித்தியாசம் வீடியோவில் அப்பட்டமாகத் தெரிகிறது.
सोशल मीडिया पर वायरल यह वीडियो कटिहार रेलवे स्टेशन का बताया जा रहा है, खीरा को हरे रंग से रंगती दिखी महिलाएं। pic.twitter.com/AdVmfTo00G
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) May 8, 2026
கண்களுக்குப் பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதற்காகவும், காய்கறிகள் பசுமையாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவும் உணவில் சேர்க்கக்கூடாத நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களைப் பயன்படுத்துவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்பு மற்றும் விதிகள் குறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “இனிமேல் எதைத்தான் நம்பி சாப்பிடுவது?” என மக்கள் வேதனையோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
