தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள விஜய், திராவிடக் கட்சிகளின் அரைநூற்றாண்டு கால ஆதிக்கத்தை உடைத்து எறிந்துள்ளார்.

மேலும் ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள அவர், தனது முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து முதல்வர் பதவியை நோக்கி முன்னேறுவது தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றியின் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன், சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் தோல்வியடையப் போவதாகப் பரவிய வதந்திகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த 28 வயது தீவிர ரசிகர் ஒருவர், தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்தச் செய்தி வெளியாகி அனைவரையும் நிலைகுலையச் செய்துள்ள நிலையில், மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், இத்தகைய விபரீத முடிவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.