தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை தெற்குத் தொகுதியில் ஆரம்பத்திலேயே அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இத்தொகுதியில் பதிவான மொத்தம் 1582 தபால் வாக்குகளில், திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி தனது போட்டியாளர்களை விடக் கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். கொங்கு மண்டலத்தைக் குறிவைத்து திமுக போட்ட ‘மாஸ்டர் பிளான்’ தபால் வாக்குகளிலேயே வேலை செய்யத் தொடங்கியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கோவையில் தடம் பதிக்கத் துடிக்கும் திமுக-வுக்கு, செந்தில்பாலாஜியின் இந்த ஆரம்பகட்ட முன்னிலை பெரும் தெம்பைக் கொடுத்துள்ளதோடு, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.