மும்பையில் மராத்தி மொழி தொடர்பாக ராஜ் தாக்கரேவை தரக்குறைவாக பேசிய நபர் ஒருவரை, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ராஜ் தாக்கரேவிடம் மராத்தி கற்க முடியாது என அந்த நபர் ஆபாச வார்த்தைகளால் பேசியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், மும்பையில் மீண்டும் மொழிப் போர் வெடித்துள்ளதை இது காட்டுகிறது.மறுபுறம், மகாராஷ்டிரா போக்குவரத்துத் துறை ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்களிடையே அடிப்படை மராத்தி மொழியை ஊக்குவிக்கும் திட்டத்தை மே 1 முதல் தொடங்கியுள்ளது.
<a href=”http://
🚨Mumbai Shocker: Man Abuses Raj Thackeray, Gets Brutally Beaten by MNS Workers in Kadivali, Mumbai
A video from Kadivali, Mumbai is going viral where a man is seen using filthy abuses against Raj Thackeray.
He was allegedly thrashed by MNS activists for his remarks.
He was… pic.twitter.com/Rkp8Ni4dJW
— Ramesh Tiwari (@rameshofficial0) May 2, 2026
“>
முதல் 100 நாட்களுக்கு டிரைவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் மட்டுமே வழங்கப்படும் என்றும், மராத்தி தெரியவில்லை என்பதற்காக அபராதம் விதிக்கப்படாது என்றும் அமைச்சர் பிரதாப் சர்நாயக் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் நடந்துள்ள இந்தத் தாக்குதல் சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
