இன்றைய டிஜிட்டல் உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றப்பட்டாலும், ஒரு சில வீடியோக்கள் மட்டுமே நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.

அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில், சிறுமி ஒருவர் சோபாவில் படுத்திருக்கும் தனது பாட்டியை  பார்த்து அப்படியே ஒரு ஓவியத்தை வரைந்துள்ளார்.

அந்த ஓவியம் எவ்வளவு தத்ரூபமாக இருக்கிறதோ இல்லையோ, அதைப் பார்த்தால் மஜுனு பாய் கூட கைகூப்பித் தொழுதுவிடுவார் எனும் அளவிற்கு வேடிக்கையாக அமைந்துள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் “இது பெயிண்டிங் அல்ல, கொலை” எனத் தங்களது பாணியில் கமெண்ட் செய்து வருகின்றனர். இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, தற்போது இணையவாசிகளின் ஃபேவரைட் வீடியோவாக மாறி வைரலாகி வருகிறது.