அமெரிக்காவின் டிஎல்சி சேனலில் ஒளிபரப்பாகும் ‘மை ஸ்ட்ரேஞ்ச் அடிக்‌ஷன்’ என்ற நிகழ்ச்சியில், அனிசா என்ற இளம்பெண் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் அனைவரையும் உறைந்து போகச் செய்துள்ளது. தனக்குத் தனது தந்தையின் பயன்படுத்திய உள்ளாடைகளைத் திருடி முகர்ந்து பார்க்கும் விசித்திரமான பழக்கம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு செய்வதால் தனக்கு ஒருவித நிம்மதி கிடைப்பதாகவும், இதற்கும் பாலியல் உணர்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.

சுமார் 25 நிமிடங்கள் கூட இந்த உள்ளாடைகளை முகராமல் இருந்தால் தனக்கு பதற்றமும், பயமும் ஏற்படுவதாகக் கூறும் அவர், இதற்காக எப்போதும் தனது கைப்பையில் தந்தையின் உள்ளாடைகளை வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சிறுவயதிலிருந்தே இந்த விசித்திர பழக்கம் இருப்பதாகவும், இதன் காரணமாகத் தனது வேலையில் பல வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும் அனிசா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியின் மூலம் இந்த விவகாரம் தெரிந்ததும் அவரது தந்தை மிகுந்த அதிர்ச்சியும், அருவருப்பும் அடைந்துள்ளார்.

உளவியல் ரீதியாக இது ஒரு வகையான மனநல பாதிப்பு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மன அழுத்தம் அல்லது ஆழ்மனதில் உள்ள பயம் காரணமாகச் சிலருக்கு இதுபோன்ற விசித்திரமான வாசனைப் பழக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by My Strange Addiction (@strange_addictionss)

“>

தற்போது இந்த இளம்பெண் தனது பழக்கத்திலிருந்து மீள மனநல ஆலோசனைகளைப் பெறத் தொடங்கியுள்ளார். சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி மிகுந்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.