இணையத்தில் ‘வியூஸ்’ (Views) மற்றும் லைக்குகளைப் பெறுவதற்காகச் சில இன்ஃப்ளூயன்சர்கள் செய்யும் செயல்கள் அவ்வப்போது எல்லை மீறிச் செல்வதுண்டு. அந்த வகையில், தற்போது பிரபல சமூக வலைதளப் பிரபலம் புனீத் சூப்பர் ஸ்டார், சாக்கடை நீரைத் தொட்டு உணவைச் சாப்பிடும் வீடியோ ஒன்று வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
(X) தளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், புனீத் சூப்பர் ஸ்டார் ஒரு சாக்கடை கால்வாயின் அருகே நிற்கிறார். அதனை அவர் கிண்டலாக சாக்கடை உணவகம் என்று அழைக்கிறார். அங்கு நின்றபடி பானிபூரி போன்ற ஏதோ ஒரு உணவை சாப்பிடும் அவர், எதிர்பாராத விதமாக அங்கிருக்கும் அசுத்தமான சாக்கடை நீரில் நனைத்து உட்கொள்கிறார். இந்த அருவருப்பான காட்சி காண்போரைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
मानती हूं सोशल मीडिया influencer क़ा दौर है, और लोग अच्छी कमाई कर लेते हैँ पर…….
इस हद तक जाकर नाले में डुबकी लगाना और गंदे पानी का सेवन करना 🤮… ये तो सरासर जाहिलियत है, कहीं कोई ऐसी वैसी बीमारी हो गयी तो लेने के देने भी पड़ सकते है… pic.twitter.com/OfbT2F2vdW
— Nalini (@Nalini9452) April 28, 2026
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பலரும் இத்தகைய செயல்கள் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். “இந்த மனிதர் ஒரு சில காசுகளுக்காக இந்தியாவின் பிம்பத்தை உலக அளவில் கேலிப்பொருளாக மாற்றுகிறார். இவரைப் போன்றவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கொந்தளித்து வருகின்றனர். “இன்னும் சிலரோ இது ஒரு சுத்திகரிப்பு சடங்கு” என நையாண்டியாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
தனிநபர் ஒருவரின் இந்த அருவருப்பான செயல், இணையத்தில் மத மற்றும் அரசியல் ரீதியிலான மோதலுக்கும் வித்திட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் இதைக் கேலி செய்ய, இந்தியப் பயனாளர்கள் பலரோ, “எந்த ஒரு மதமும் இத்தகைய அசுத்தமான செயல்களைப் போதிப்பதில்லை, இது ஒரு தனிநபரின் முட்டாள்தனம்” என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.
வித்தியாசமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செயல்களைச் செய்து அதன் மூலம் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்ப்பதே புனீத் சூப்பர் ஸ்டாரின் பாணியாகும். எனினும், ஒரு இன்ஃப்ளூயன்சராகப் பொறுப்பின்றிச் செயல்பட்டு, சுகாதாரத்திற்குப் புறம்பான மற்றும் நாட்டின் பெயருக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அவர் நடந்து கொண்டது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
