2024 மார்ச் மாதம் புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 5-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் மற்றும் புதுச்சேரியையே உலுக்கியது. இந்த வழக்கில் கைதான முதியவர் விவேகானந்தன் ஏற்கனவே சிறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்றொரு முக்கிய கைதியான கருணாஸை இன்று புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது.

​சுமார் 500 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளி கருணாஸுக்கான தண்டனை விவரங்கள் வரும் மே 5-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் அவருக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்குமா என்பதை ஒட்டுமொத்த புதுச்சேரியும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.