தமிழக அரசியலில் காலம் காலமாக திமுகவின் அசைக்க முடியாத பலமாகப் பார்க்கப்படுவது பெண் வாக்காளர்கள் தான். ஆனால், இந்த முறை ‘ஆக்சிஸ் மை இந்தியா’ வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகள் அந்த நம்பிக்கையை உலுக்கியுள்ளன. பெண்களின் ஆதரவில் 38 சதவீதத்தைப் பெற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திமுக 34 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற விருப்பத்திலும் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினை (35%) பின்னுக்குத் தள்ளி, 37 சதவீத ஆதரவுடன் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். பெண்களின் இந்தத் திடீர் மனமாற்றமும், முதல்வர் விருப்பத்தில் விஜய்க்கு கிடைத்துள்ள முன்னிலையும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளன. மே 4-ல் இந்த மாற்றங்கள் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
