தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பொதுவாக, இந்து அல்லாத மாற்று மதத்தினர் திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய வேண்டுமானால், கோவிலின் மரபுப்படி தங்களுக்கு அந்தத் தெய்வத்தின் மீது முழு நம்பிக்கை இருப்பதாகக் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்பது நீண்ட கால நடைமுறை. அதன்படி, கோவிலுக்குச் சென்ற விஜய்யிடம் கோவில் அதிகாரிகள் அந்தக் கடிதத்தைக் கேட்டுள்ளனர்.
இதனை ஏற்றுக்கொண்ட விஜய், திருச்செந்தூர் முருகன் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகத் தனது கைப்படக் கடிதம் எழுதி, அதில் “ஜோசப் விஜய்” என்று கையெழுத்திட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். அந்தக் கடிதத்தை ஆய்வு செய்த பின்னரே அவர் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். அரசியல் ரீதியாக விஜய் ஆன்மீகத்தை நோக்கி நகர்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர் தனது மத அடையாளத்தைத் தாண்டி கோவிலில் முறைப்படி அனுமதி பெற்றுத் தரிசனம் செய்தது அவரது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
