தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது 2026 சட்டமன்றத் தேர்தலின் கடைசி பிரசாரத்தின் போது, “குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் தவெக-விற்கு வாக்களிக்க வலியுறுத்த வேண்டும்” என்று பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பல சிறு குழந்தைகள் அழுதுகொண்டே தங்கள் பெற்றோரை விஜய்க்கு வாக்களிக்குமாறு கட்டாயப்படுத்தும் வீடியோக்கள் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் அதிகளவில் வெளியாகத் தொடங்கின.

இந்தச் செயலுக்குத் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், “குழந்தைகளை அரசியலுக்குப் பயன்படுத்துவது தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகும்.

இது குழந்தைகளின் உரிமைகளைப் பாதிக்கும் செயல்” என்று சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், விஜய் இந்தப் பேச்சுக்காகப் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இது போன்ற உணர்ச்சி ரீதியான மிரட்டல் வீடியோக்களை உருவாக்குவதைத் தவெக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் மீது எழுந்துள்ள இந்தப் புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.