ஐபிஎல் 2026 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியை, ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே நிலைகுலையச் செய்தனர். குறிப்பாக பவர்பிளேயின் 6 ஓவர்களில் வெறும் 13 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான ஒரு சாதனையைப் படைத்தது. புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லியின் முதுகெலும்பை உடைத்தனர்.
Season's first strong #Duststorm impacting most parts of #Delhi NCR now. Strong winds to persist for 30-45 mins followed by showers.
Weather conditions will improve during late night hours. #DelhiRains pic.twitter.com/OffgddEMBi— Weatherman Navdeep Dahiya (@navdeepdahiya55) April 27, 2026
போட்டியின் இடையே பலத்த தூசுப் புயல் வீசியதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. புயல் ஓய்ந்ததும் ஆர்சிபி வீரர்கள் ஆக்ரோஷமாகச் செயல்பட்டு டெல்லியை 46 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழக்கச் செய்தனர். இந்த சீசனில் ஆடிய 7 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்றுள்ள ஆர்சிபி அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நடப்பு சாம்பியனான ஆர்சிபியின் இந்த அதிரடி ஆட்டம் மற்ற அணிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
