ஐபிஎல் 2026 தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்காமல் கெத்து காட்டி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, அந்த அணியின் வீரர் ஷஷாங்க் சிங் பெரும் தலைவலியாக மாறியுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 35-வது லீக் போட்டியில், அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் கே.எல். ராகுல் கொடுத்த மிக எளிதான கேட்ச் வாய்ப்பை ஷஷாங்க் சிங் கோட்டை விட்டார். பந்து கைகளில் பட்டு பவுண்டரிக்குச் சென்றதைக் கண்டு ஆத்திரமடைந்த அர்ஷ்தீப் சிங், மைதானத்திலேயே தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
லக்னோ அணிக்கு எதிரான முந்தைய போட்டியிலும் 3 கேட்சுகளைத் தவறவிட்ட ஷஷாங்க் சிங், தற்போது தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் 4 கேட்சுகளை நழுவவிட்டு பீல்டிங்கில் படுமோசமாகச் சொதப்பி வருகிறார்.
ஷஷாங்க் சிங்கின் இந்தத் தொடர் சொதப்பல்கள் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆகியோரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. டக்அவுட்டில் அமர்ந்திருந்த பாண்டிங், ஷஷாங்க் சிங்கின் மோசமான பீல்டிங்கைக் கண்டு முகம் சிவந்து காணப்பட்டார்.
ஒருபுறம் அணி வெற்றிகளைத் குவித்து வந்தாலும், முக்கியக் கட்டங்களில் இது போன்ற கேட்ச் தவறுகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ஷஷாங்க் சிங்கிற்குப் பதிலாக மாற்று வீரரைக் களமிறக்க நிர்வாகம் யோசித்து வருகிறது. “கேட்சுகளைத் தவறவிட்டால் போட்டியைத் தவறவிட வேண்டியிருக்கும்” என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் ஷஷாங்க் சிங்கின் ஆட்டம் அமைந்துள்ளதாகக் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
