ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லின் செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் குறித்து முன்னாள் இந்திய அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 206 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த போதிலும், கில்லின் தவறான பந்துவீச்சு மாற்றங்களால் ஆர்சிபி அணி எளிதாக வெற்றி பெற்றது. குறிப்பாக, அனுபவ வீரர் முகமது சிராஜின் ஓவர்களைச் சரியாகப் பயன்படுத்தாமல், இக்கட்டான நேரத்தில் அனுபவம் குறைந்த வீரர்களுக்கு ஓவர் கொடுத்தது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது எனச் சேவாக் சாடியுள்ளார். “ஒரு கேப்டனாகத் தனது முக்கியப் பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை வைக்கத் தவறிவிட்டார் கில்” எனச் சேவாக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், தற்போது ஆர்சிபி-யிடம் வாங்கிய அடி குஜராத் அணியின் பிளே-ஆஃப் கனவுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலிக்கு டக் அவுட் ஆகும் வாய்ப்பை நழுவவிட்டது மற்றும் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது எனத் தனது தவறுகளைக் கில் ஒப்புக் கொண்டாலும், அடுத்தடுத்து வரும் போட்டிகளில் கேப்டனாக அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நாளை (ஏப்ரல் 26) சென்னையில் சிஎஸ்கே-வை எதிர்கொள்ளும் குஜராத் அணி, இந்தத் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
