ஐபிஎல் 2026 தொடரில் நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில், பரம எதிரியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 103 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் படுதோல்வி அடைந்தது.
முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 207 ரன்களைக் குவித்தது. 208 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, வெறும் 104 ரன்களுக்கே சுருண்டு இந்த சீசனில் தனது 5-வது தோல்வியைப் பதிவு செய்தது. புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்ட மும்பை அணியின் கேப்டன் பதவியில் மாற்றம் வேண்டும் என ரசிகர்கள் மைதானத்திலும் சமூக வலைதளங்களிலும் கொந்தளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் காதலி மஹீகா சர்மா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது. போட்டி முடிந்த பிறகு எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில், ஜஸ்ப்ரீத் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் மற்றும் தீபக் சஹரின் மனைவி ஆகியோர் தோல்வியின் வருத்தத்தில் சோகமாக அமர்ந்திருக்க, அவர்கள் முன் அமர்ந்து மஹீகா சிக்னல் காட்டி கலகலப்பாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.
At this point, Hardik Pandya really needs to cut down the off-field distractions (not completely but Atleast for sometime) and focus on his game. His batting, bowling, and captaincy, all three are dipping, and that’s a bigger concern than anything else. When the team isn’t… pic.twitter.com/QTMBKJkssG
— Vipin Tiwari (@Vipintiwari952) April 23, 2026
“>
“அணி இவ்வளவு மோசமாகத் தோற்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்குப் போய்க் கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு மட்டும் எப்படி இப்படிச் சிரிக்க முடிகிறது?” என நெட்டிசன்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் மஹீகாவைச் சாடி வருகின்றனர்.
