தேர்தல் பிரச்சாரக் களத்தில் முதல்வர் ஸ்டாலினின் பழைய பேச்சுகளைச் சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளார். “2016-ல் செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது, கரூருக்கே நேரடியாக வந்து அவரைப் பயங்கரமான ஊழல்வாதி என்று வறுத்தெடுத்தவர் தான் இதே ஸ்டாலின். ஆனால், இன்று அதிகாரம் கையில் வந்தவுடன் அதே செந்தில் பாலாஜியை ‘கோடு போட்டால் ரோடு போடுவார்’ என்று புகழ்ந்து தள்ளுகிறார்” என இபிஎஸ் சாடினார்.
மேலும், அவர் போட்ட ரோடு என்ன லட்சணத்தில் இருக்கிறது என்பதுதான் இன்று ஊழல் வழக்காக நீதிமன்றத்தில் இருக்கிறது என்றும், அதிகாரத்திற்காக இப்படித் தரம் தாழ்ந்து பாராட்டுவதுதான் திராவிட மாடல் அழகா? என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இபிஎஸ்-ஸின் இந்தச் சாட்டையடிப் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
