பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்துத் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நடிகர் சத்யராஜ், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளை இன்றும் (ஏப். 20) மிகக் காட்டமாக விமர்சித்தார்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் தங்களை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டுக் கொள்வதைச் சாடிய அவர், “யார் சினிமாவில் இருந்து வந்தாலும் உடனே எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா? எம்.ஜி.ஆர் கொள்கை ரீதியாகத் திராவிட இயக்கத்தில் பட்டை தீட்டப்பட்டு வந்தவர். தம்பி விஜய், முதலில் உங்கள் ரசிகர்களுக்கு உங்கள் கட்சியின் கொள்கைகள் என்ன என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பினார்.
“உங்கள் ரசிகர்களுக்கு கொள்கைகள் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டாமா தம்பி விஜய்?
யார் சினிமாவில் இருந்து வந்தாலும் எம்ஜிஆர் என்றால் எப்படிங்க? பரப்புரையில் நடிகர் சத்யராஜ் பேச்சு#Chennai | #Sathyaraj | #DMK | #TVK | #Vijay | #ElectionWithPT pic.twitter.com/d04eu2H5hB
— PttvOnlinenews (@PttvNewsX) April 20, 2026
“>
சினிமாப் புகழை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் வெல்ல முடியாது என்றும், வெறும் ‘கட்-அவுட்’ அரசியலை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும் அவர் ஆவேசமாகப் பேசினார். பெரம்பூர் தொகுதியில் விஜய் நேரடியாகப் போட்டியிடுவதால், சத்யராஜின் இந்தத் தொடர் தாக்குதல் தவெக மற்றும் திமுக தொண்டர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
