மகாராஷ்டிர மாநிலம் சகஜீவன் நகரைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மர்மமான முறையில் மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மாயமாவதற்கு முன்னதாகப் பதிவான சிசிடிவி காட்சிகள், பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. சகஜீவன் நகரைச் சேர்ந்த சஞ்சீவனி ராகுல் வராடே (18) என்ற அந்தப் பெண், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. அந்த  பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் சஞ்சீவனி மாயமான காட்சிகள் பதிவாகியுள்ளன.

அதில் சஞ்சீவனி வீட்டை விட்டு வெளியே வரும்போது, அவருக்கு முன்பாக ஒரு முதியவர் கடந்து செல்கிறார். அதன் பிறகு சஞ்சீவனி நடக்கத் தொடங்குகிறார். அப்போது அவரது ஒரு கை அந்தரத்தில் உயர்த்திப் பிடித்தவாறு உள்ளது. யாரோ ஒருவர் அவரது கையைப் பிடித்து இழுத்துச் செல்வது போன்ற தோற்றத்தை அந்த வீடியோ ஏற்படுத்துகிறது. ஆனால், வீடியோவில் சஞ்சீவனியைத் தவிர வேறு யாரும் அருகில் இல்லை.

 

மேலும் அவர் நடக்கும் விதம், ஏதோ மயக்க நிலையில் அல்லது சுயநினைவற்ற நிலையில் யாரோ ஒருவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பது போல இருப்பதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இது ஒரு விதமான வசிய (Hypnotism) முறையிலான கடத்தலாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர். சுயநினைவின்றி அவர் இழுத்துச் செல்லப்பட்டாரா அல்லது ஆழ்ந்த சிந்தனையில் கையை உயர்த்தியபடி சென்றாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சஞ்சீவனியைப் பற்றி தகவல் கிடைத்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.