தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுக-வில் இணைந்த பிறகு அவருக்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

தேனியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய அவர், “கடந்த முறை (நாடாளுமன்றத் தேர்தல்) நாம் ஓபிஎஸ் அண்ணன் நின்ற தேனி தொகுதியில் தான் தோல்வியைத் தழுவினோம். ஆனால், இன்று அதே அண்ணன் நம் பக்கம் இருக்கிறார். கடந்த முறை யாரிடம் தோற்றோமோ, அதே அண்ணனை இந்த முறை மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து, மிகக் கெத்தாக சட்டமன்றத்திற்கு நாம் அனுப்பி வைக்க வேண்டும்” என்று ஆவேசமாக முழங்கினார்.
#WATCH | “போன முறை நாமதான் ஓபிஎஸ் அண்ணன் கிட்ட தோத்தோம். இந்த முறை அவரை வெற்றி பெற வைத்து கெத்தா சட்டமன்றத்துக்கு அனுப்பணும்..” -உதயநிதி ஸ்டாலின்#SunNews | #Bodi | #TNElectionWithSunNews | @OfficeOfOPS | @Udhaystalin pic.twitter.com/tbpZeCrGwh
— Sun News (@sunnewstamil) April 16, 2026
“>
எதிரும் புதிருமாக இருந்த அரசியல் எதிரியைத் தனது ‘தாய் கழகத்தில்’ அரவணைத்துக் கொண்டதோடு, அவருக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த இந்த ‘கெத்தான’ பேச்சு, தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
