ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் ‘டபுள் ஷாட் எனர்ஜி டிரிங்க்’ கேன் ஒன்றிற்குள் இறந்த நிலையில் எலி இருந்ததாக பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெடிட் தளத்தில் முதலில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், அந்தப் பெண் தான் வாங்கிய காபி கேனுக்குள் ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்து, கேனை வெட்டித் திறந்து பார்க்கிறார்.
உள்ளே இருந்த காபியை ஊற்றிய பிறகு, காபியில் ஊறிய நிலையில் ஒரு சிறிய கருப்பு நிற உருவம் வெளியே விழுந்தது. அது இறந்த நிலையில் இருந்த ஒரு எலி என்பதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் அலறியுள்ளனர். இந்த வீடியோ காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், பலரும் உணவுப் பாதுகாப்பு குறித்துக் கவலை தெரிவித்து வருகின்றனர்.
NEW – Starbucks is now receiving massive backlash online after a woman discovered a fully intact mouse inside her can of Double Shot Energy, which she says she plans to sue over. pic.twitter.com/RzzWNVpQzX
— Right Angle News Network (@Rightanglenews) April 13, 2026
இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இணையவாசிகள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. “சீல் வைக்கப்பட்ட கேனுக்குள் வாரக்கணக்கில் எலி இருந்தால் அது அழுகிப் போயிருக்க வேண்டுமே?” என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், வீடியோவில் கேன் ஏற்கனவே திறக்கப்பட்டது போலத் தெரிவதாகவும், இது வேண்டுமென்றே திட்டமிடப்பட்ட ஒரு நாடகமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். இதுவரை இது தொடர்பாக ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றாலும், பேக்கேஜ் செய்யப்பட்ட பானங்களை வாங்கும் நுகர்வோர் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
