தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பூஜா ஹெக்டே, ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்திருப்பது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு ஒரு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகப் படக்குழுவினர் இரவு பகலாக, கணக்கில்லாத நேரத்தைச் செலவிட்டு உழைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு கடின உழைப்பிற்குப் பிறகு இப்படி நடப்பது வேதனையளிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், இது நடிகர் விஜய்யின் கடைசிப் படம் என்பதால், இதனைத் திரையரங்குகளில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடுவதுதான் அந்த உன்னத கலைஞனுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும் என்றும் பூஜா ஹெக்டே எமோஷனலாகப் பதிவிட்டுள்ளார்.

“விஜய்யின் கடைசிப் படத்தை தியேட்டரில் கொண்டாடுவோம், அதுவரை காத்திருப்போம்” என அவர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படத்தை இணையத்தில் பார்த்து அதன் மதிப்பைக் குறைக்க வேண்டாம் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
