இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம் பலரது தலைக்கேறிவிட்டது. அதற்காகத் தங்களின் உயிரைப் பணையம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடவும் பலர் துணிந்து விடுகின்றனர்.
அந்த வகையில், ரவீனா தேவி (Rabina Devi) என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அந்தப் பெண் தனது தலையில் தணல் வீசி எரியும் மண் அடுப்பை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார்.
View this post on Instagram
அந்த அடுப்பின் மீது ஒரு தவா வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பெண் அந்தத் தவாவில் ரொட்டியைச் சுட்டு எடுக்கிறார். அடுப்பு கொழுந்துவிட்டு எரியும் நிலையிலும், அந்தப் பெண் எவ்வித பயமுமின்றி பாட்டுப் பாடிக்கொண்டே அமர்ந்திருக்கிறார்.
ஒரு சிறிய கவனக்குறைவு ஏற்பட்டால் கூட அந்தப் பெண்ணின் முகம் மற்றும் உடல் கடுமையாகக் கருகும் அபாயம் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும், வைரலாவதற்காக இப்படியொரு முட்டாள்தனமான செயலைச் செய்யலாமா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது போன்ற ஆபத்தான செயல்களை யாரும் பின்பற்ற வேண்டாம் எனவும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
