சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், டோம்பிவிலியில் உள்ள பாதுகாப்புப் படை ஏஜென்சி ஒன்றில் பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறார்.
அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டும் சேத்தன் சவுகான், ஹேமந்த் சவுகான், உமேஷ் வர்மா ஆகிய மூவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘பார்ட்டி’ இருப்பதாகக் கூறி அந்தப் பெண்ணை கம்பல்பாடா பகுதியில் உள்ள ஒரு பிளாட்டிற்கு (Flat) அந்த 3 பேரும் அழைத்துள்ளனர்.
நண்பர்கள் தானே என்று நம்பிச் சென்ற அந்தப் பெண்ணிற்கு அங்கு நரக வேதனை காத்திருந்தது. பார்ட்டி முடிந்தவுடன், அந்த மூவரும் தங்கள் சுயரூபத்தைக் காட்டி அந்தப் பெண்ணை அடுத்தடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தால் நிலைகுலைந்த அந்தப் பெண், திலக் நகர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார், தேடுதல் வேட்டை நடத்திச் சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகள் மூவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் டோம்பிவிலி பகுதியில் பெரும் பரபரப்பையும், பெண் பயணிகளிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
