தமிழக அரசியல் களத்தில் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வேட்பாளர் தேர்விலும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.

குறிப்பாக, சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவிய வேளையில், தனது வீட்டில் நீண்ட காலம் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவரின் மகனை வேட்பாளராக விஜய் அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா மற்றும் பொதுவாழ்வில் தனக்குத் துணையாகவும், விசுவாசமாகவும் இருந்த தனது பணியாளரின் குடும்பத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்த ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கோடிகளில் பணம் படைத்தவர்களுக்கே அரசியல் கட்சிகள் முன்னுரிமை அளிக்கும் சூழலில், சாதாரண பின்னணி கொண்ட ஒருவருக்கு வாய்ப்பளித்த விஜய்யின் இந்தச் செயல் தவெக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருகம்பாக்கம் தொகுதியில் விஜய்யின் இந்த ‘விசுவாச அஸ்திரம்’ எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.