இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில், சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் தனக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், அணியில் இடம் கிடைக்காதது பற்றி தமக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும், கடந்த 3-4 சீசன்களாக ஐபிஎல் போட்டிகளில் தான் சிறப்பாக விளையாடி வருவதால் யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
118 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4 சதங்களுடன் 3,866 ரன்களைக் குவித்துள்ள கில், தனது திறமை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார். இந்த முறை ஐபிஎல் 2026 கோப்பையைத் தனது தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியே கைப்பற்றும் என்று கில் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்று வெளியேறிய குஜராத் டைட்டன்ஸ், இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியுடன் தனது பயணத்தைத் தொடங்குகிறது.
பலம் வாய்ந்த வீரர்களுடன் களமிறங்கும் குஜராத் அணி, இந்த முறை எப்படியும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் தீவிரமாகத் தயாராகி வருகிறது.
