நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்குவதாக அறிவித்தது முதல் கரூர் போக்குவரத்து நெரிசல், ‘ஜனநாயகன்’ பட வெளியீடு மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எனத் தொடர்ந்து பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்.
இச்சூழ்நிலையில், விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. விஜய்யின் அரசியல் நகர்வுகள் பலத்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு நெருக்கமானவர்கள் திரைமறைவில் நடக்கும் உண்மைகளை விளக்கி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ஷாம் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். “விஜய் அண்ணாவுக்கு யாரோ எல்லாம் அறிவுரை சொல்வதைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது; அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாது” என்று அவர் கூறியுள்ளார்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அதைத் துறந்துவிட்டு அரசியலுக்கு வர எவ்வளவு மனதைரியம் வேண்டும் என்பதைப் பலரும் யோசிப்பதில்லை என்றும், இத்தனை சோதனைகளையும் கடந்து நிற்கும் அவரது உறுதியை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் ஷாம் விஜய்யின் தைரியத்தைப் பாராட்டியுள்ளார்.
