சமூக வலைதளங்களில் ஒரு சுவாரஸ்யமான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஒரு தாய் தனது குழந்தைக்கு ஆரோக்கியமான உணவை ஊட்ட கையாண்ட விசித்திரமான முறை பலரையும் வியக்க வைத்துள்ளது. பொதுவாக குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும், ஆனால் சத்தான கேழ்வரகு உணவை அவர்கள் அவ்வளவு எளிதில் சாப்பிட மாட்டார்கள்.

இந்த வீடியோவில், ஒரு பெண் குழந்தையின் முன்னால் மேகி தட்டை வைத்து அதைக் காட்டி ஆசையூட்டுகிறார். குழந்தை நூடுல்ஸ் சாப்பிட ஆர்வமாக வாயைத் திறக்கும்போது, மற்றொரு பெண்மணி மிக லாவகமாக ராகி உணவை குழந்தையின் வாயில் ஊட்டிவிடுகிறார்.

“>

இந்த வேடிக்கையான ‘ஏமாற்று’ வித்தை ஒருபுறம் சிரிப்பை வரவழைத்தாலும், மறுபுறம் ஆரோக்கியமான உணவை குழந்தைகளுக்கு எப்படிக் கொண்டு சேர்க்கலாம் என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது. மேகியைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் வாயைத் திறக்கும் குழந்தை, உள்ளே செல்வது ராகி என்று தெரிந்ததும் காட்டும் அப்பாவித்தனமான முகபாவனைகள் நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளன.

இந்த வீடியோ ‘எக்ஸ்’ தளத்தில் பகிரப்பட்டு ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. சிலர் இதை ஒரு புத்திசாலித்தனமான அணுகுமுறை என்று பாராட்டினாலும், மற்ற சிலர் குழந்தைகளிடம் உணவை வைத்து இப்படி விளையாடுவது சரியல்ல என்ற மாற்றுக் கருத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.