பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வாகனத்தில் புகழ்பெற்ற சமூக ஊடக நிறுவனமான ‘மெட்டா’வின் அடையாள அட்டை தொங்கவிடப்பட்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநரான சித்தாந்த் சிங் ராஜ்புத் என்பவர் பகிர்ந்த இந்த வீடியோவில், ஆட்டோவின் மேற்கூரையில் மெட்டா நிறுவனத்தின் ஐடி கார்டு இருப்பதைச் சுட்டிக்காட்டி, “இந்த ஆண்டு தொழில்நுட்பத் துறையில் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மிகவும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன” என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார்.
View this post on Instagram
“>
இது அந்த ஆட்டோ ஓட்டுநர் முன்பு மெட்டா நிறுவனத்தில் பணிபுரிந்த மென்பொருள் பொறியாளராக இருக்கலாம் என்ற யூகத்தை மக்களிடையே கிளப்பியது. இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்த உண்மைத் தன்மை குறித்து நெட்டிசன்கள் பலதரப்பட்ட கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் சிலர் இது வேலை இழந்த ஒரு மென்பொருள் பொறியாளரின் வாழ்வாதாரப் போராட்டமாக இருக்கலாம் என்று பதிவிட, மற்றவர்களோ இது வெறும் கவனத்தை ஈர்க்கும் செயலாகவோ அல்லது ஆட்டோவில் பயணம் செய்த பயணி யாராவது தவறவிட்ட அடையாள அட்டையாகவோ இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
இந்நிலையில் வீடியோவை வெளியிட்ட சித்தாந்தும், அந்த அடையாள அட்டை உண்மையில் டிரைவருடையது தானா என்று தான் உறுதிப்படுத்தவில்லை என்று பின்னாளில் விளக்கமளித்தார். எது எப்படியோ, பெங்களூருவின் தொழில்நுட்ப கலாச்சாரத்தையும் ஐடி துறையில் நிலவும் வேலைவாய்ப்பு நிச்சயமற்ற தன்மையையும் இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை பேசுபொருளாக்கியுள்ளது.
