சமூக வலைதளங்களில் ‘ஆஸி பாய்’ (Aussie Bhai) என்று அழைக்கப்படும் ஆண்டி இவான்ஸ் என்ற ஆஸ்திரேலிய இளைஞர், குருகிராம் சாலையில் எடுத்த ஒரு வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் அவர், சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு எல்பிஜி (LPG) சிலிண்டர் லாரியைக் காட்டி, “இந்தியாவிலேயே மிகவும் விலை உயர்ந்த வாகனம் இதுதான்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வைக் கிண்டல் செய்யும் விதமாக அவர் வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இந்த டிரைவருக்கு இசட் பிளஸ் (Z+) பாதுகாப்பு கொடுக்க வேண்டும்” என்றும், “நிஜமாவே இது எல்லா கார்களை விடவும் விலை உயர்ந்ததுதான்” என்றும் ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்திய கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை மையமாக வைத்து தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வரும் இந்த ‘ஆஸ்திரேலிய பாய்’, தற்போது சிலிண்டர் விலையை வைத்து செய்த ‘ரோஸ்ட்’ வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
