மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியில், வாலிபர் ஒருவர் தனது உடலில் விபரீத முயற்சியில் ஈடுபட்டு, ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் உள்ளே சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 36 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பாட்டில் அகற்றப்பட்டது.
சதாரா பகுதியைச் சேர்ந்த 38 வயது திருமணமான நபர் ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை கடும் வயிற்று வலியுடன் நவ்தீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் சுனில் சர்மா, எக்ஸ்-ரே (X-ray) எடுத்துப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். அந்த நபரின் மலக்குடல் பகுதியில் ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் சிக்கியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
பாட்டிலை இயற்கையான முறையில் வெளியே எடுக்க அந்த நபர் பல மணி நேரம் முயன்றும் பலன் அளிக்கவில்லை. வலியால் துடித்த அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். சுமார் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் நீடித்த சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பின், அந்தப் பாட்டில் பாதுகாப்பாக அகற்றப்பட்டது. நான்கு நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்த அந்த நபர், தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மனநல நிபுணர்கள் கூறுகையில், இது ‘ஏனல் எரோட்டிசம்’ (Anal Eroticism) எனப்படும் ஒருவகை மனோபாலியல் குறைபாட்டின் விளைவாக இருக்கலாம் எனத் தெரிவித்தனர். இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் விசித்திரமான பொருட்களைப் பயன்படுத்தி இன்பம் காண முயல்வார்கள் என்றும், இது உயிருக்கே ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர். மேலும் சமூகத்தில் இத்தகைய நடத்தைகள் தவறாகப் பார்க்கப்பட்டாலும், இது ஒரு வகை மனநலப் பாதிப்பு என்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
