நிகழ்ச்சி ஒன்றில், அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தில் நபரா செய்த ஒரு காரியம் அங்கிருந்தவர்களை உறைய வைத்துள்ளது. மேடையில் மைக் பிடித்த கணவன், “என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் அவர் 4 மாத கர்ப்பிணி அல்ல, 6 மாத கர்ப்பிணி. இதோ என் வக்கீல்.. அவரிடம் அந்தப் குழந்தை என்னுடையது இல்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன” என அதிரடியாகத் தெரிவித்தார். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனது மனைவி தன்னை ஏமாற்றி வருவதாகவும், யாருடன் அவர் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறாரோ அவரும் இந்த விருந்திற்கு வந்துள்ளார் எனச் சுட்டிக்காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

​இந்த அதிரடி சம்பவத்தைத் தொடர்ந்து, “இந்தத் திருமண விருந்து எனக்கானது அல்ல, துரோகம் செய்த அந்த இருவருக்கானது” என்று கூறிவிட்டு மணமகன் மேடையை விட்டு வெளியேறிய காட்சிகள் தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. ஆதாரங்களுடன் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய கணவனின் தைரியத்தைப் பாராட்டி ஒரு தரப்பினரும், பொது மேடையில் இப்படிச் செய்தது தவறு என மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.