இன்றைய காலத்தில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பிரபலம் அடைய வேண்டும் என்ற ஆசையில் பலர் பொது இடங்களில் செய்யும் அத்துமீறல்கள் எல்லை கடந்து போய்க்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், மெட்ரோ ரயில் ஒன்றில் பெண் ஒருவர் செய்த வினோதமான செயல் இப்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், ரயில் இருக்கைக்கு முன்னால் நிற்கும் அந்த பெண், திடீரென பாடல் எதுவுமின்றி பயங்கரமாக சிரிக்கத் தொடங்குகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by ghantaa (@ghantaa)

அதுமட்டுமில்லாமல், ரயிலுக்குள்ளேயே முன்னும் பின்னும் பித்து பிடித்தவர் போல ஓடி அநாகரிகமாக நடந்து கொள்கிறார். இதைப் பார்த்த பயணிகள் அச்சமடைந்த நிலையில், இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்தப் பெண்ணை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“இவர் மனநல காப்பகத்தில் இருந்து தப்பி வந்தவரா?” என்றும், “டாக்டர் என்ன சொன்னார், எப்போது குணமாகும்?” என்றும் கிண்டலாகக் கேட்டு அந்த பெண்ணை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

ரீல்ஸ் மோகத்தால் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இதுபோன்ற செயல்கள் கண்டனத்திற்குரியது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.