ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகராக விளங்கும் ரவி மோகன் சமீபத்தில் ‘பராசக்தி’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டுக்களைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, ‘டாடா’ பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’ படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தனது படங்களின் வசனங்களைப் பேசி உற்சாகப்படுத்தினார்.
அப்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வரும் “மக்களை நம்பாதவன், மக்களை ஆள முடியாது” என்ற வசனத்தையும், தனது புதிய படமான ‘கராத்தே பாபு’ படத்தில் வரும் “நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன்… நான் அரசியலையே தொழிலா பண்றவன்” என்ற அதிரடி வசனத்தையும் பேசினார்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்தச் சூழலில், ரவி மோகனின் இந்த அரசியல் கலந்த சினிமா வசனங்கள் சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.
