T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.
நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதிப் போட்டியில் அபாரமாகப் பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்ட நாயகன் விருதினை வென்றார். அதேபோல் இந்தத் தொடர் முழுவதும் பேட்டிங்கில் மிரட்டிய சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதினைத் தட்டிச் சென்றார்.
ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடிய போதிலும் 321 ரன்கள் குவித்து சஞ்சு சாம்சன் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்த உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த ஐந்து வீரர்களை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தரவரிசைப்படுத்தியுள்ளார்.
இதில் இங்கிலாந்து அணியின் வில் ஜேக்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சஞ்சு சாம்சன் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு 9.5 மதிப்பெண்களை பாண்டிங் வழங்கியுள்ளார். நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்ட் 9 மதிப்பெண்களுடன் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் தொடக்க வீரர் சாகிப்ஸாதா ஃபர்ஹான் கடைசி இடத்தைப் பிடித்துள்ளார்.
அவர் இந்தத் தொடரில் அதிகபட்சமாக 483 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தாலும் அவரது அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறத் தவறியதால் அவருக்கு 8.5 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
