தனது தாயாரின் தனிப்பட்ட ஆடியோ கசிந்த விவகாரத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது கடும் கோபத்துடன் ஒரு அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டாவுடனான திருமண மகிழ்ச்சியில் இருந்த ராஷ்மிகா, 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயார் பேசிய ஆடியோவை இப்போது வேண்டுமென்றே யாரோ கசியவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி தனது எக்ஸ் (X) தளத்தில் நீண்ட பதிவை எழுதியுள்ளார். “கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு எதிராகப் பரப்பப்படும் தவறான தகவல்கள் மற்றும் விமர்சனங்களைப் பொறுமையுடன் எதிர்கொண்டேன்.

ஆனால் இப்போது நடந்திருப்பது அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

“>

சம்பந்தப்பட்ட நபரின் அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட ஒரு தனிப்பட்ட உரையாடலை, தற்போது சர்ச்சையை உருவாக்குவதற்காகச் சிதைத்து வெளியிடுவது தனது தனியுரிமை மீதான மிகப்பெரிய தாக்குதல் என்று ராஷ்மிகா கூறியுள்ளார். இதன் மூலம் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவதைத் தம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை அமைதியாக இருந்த தான், இனி மற்றவர்களின் மரியாதையைக் காப்பாற்ற ஒரு கோடு வரைய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர் அந்தப் பதிவில் எச்சரித்துள்ளார்.

மேலும், இந்த அவதூறான ஆடியோ மற்றும் அது தொடர்பான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு ராஷ்மிகா 24 மணிநேரக் கெடு விதித்துள்ளார். “இந்த உள்ளடக்கத்தைப் பரப்பும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்கள் உடனடியாக அதை நீக்க வேண்டும்; தவறினால் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

திருமணத்திற்குப் பின் தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சிதைக்க முயல்பவர்களுக்கு எதிராக ராஷ்மிகா எடுத்துள்ள இந்த ‘ருத்ரதாண்டவம்’ போன்ற அதிரடி முடிவு தற்போது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.