தனது வித்தியாசமான பேச்சுகளுக்கும், ட்விஸ்ட்களுக்கும் பெயர்பெற்ற நடிகர் ஆர்.பார்த்திபன், தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் விஜய் எடுத்திருக்கும் முடிவு ஒரு ‘பெரிய ரிஸ்க்’ என்று பாராட்டிய பார்த்திபன், அதே சமயம் விஜய்க்கு சில குத்தலான அட்வைஸ்களையும் கொடுத்துள்ளார்.

“சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு வருவது சாதாரண விஷயமல்ல; ரஜினி, சிரஞ்சீவி போன்றவர்களின் அரசியல் அனுபவங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனாலும் விஜய் இந்தத் துணிச்சலான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்” என்று முதலில் பாராட்டிய பார்த்திபன், அடுத்ததாகக் கூட்டணி விவகாரத்தில் தனது பாணியில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

“புதிதாகக் கட்சி தொடங்குபவர்கள் ஆளும் திமுக அரசைத் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; விஜய்யும் அதைத்தான் செய்கிறார். ஆனால், அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) சேரப்போவதாகப் பேச்சுக்கள் ஓடுகின்றன.

அப்படி நடந்தால், விஜய்யும் மற்றவர்களைப் போல ஒரு சாதாரண அரசியல் தலைவராகி விடுவாரோ என்ற அச்சம் இருக்கிறது” என்று நேரடியாகவே தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், திரிஷா விவகாரம் மற்றும் கட்சிப் பெண் நிர்வாகிகள் குறித்தும் சில நுணுக்கமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ள பார்த்திபனின் இந்த வீடியோ, தவெக மற்றும் திமுக என இருதரப்பு ஆதரவாளர்களிடையேயும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.