சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஐசிசி நடத்தும் தொடர்களில் அதிக கோப்பைகளை வென்ற அணிகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை மொத்தம் 10 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலியா, கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாகத் திகழ்கிறது.

இதில் 6 ஒருநாள் உலகக் கோப்பைகள் 1987, 1999, 2003, 2007, 2015, 2023, 2 சாம்பியன்ஸ் டிராபி, ஒரு டி20 உலகக் கோப்பை மற்றும் ஒரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் ஆகியவை அடங்கும். ஆஸ்திரேலியாவின் இந்த ஆதிக்கம் உலக கிரிக்கெட்டில் அந்த அணியின் அசைக்க முடியாத வலிமையை பறைசாற்றுகிறது.

இந்த பட்டியலில் இந்திய அணி 8 ஐசிசி கோப்பைகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா இதுவரை 2 முறை ஒருநாள் உலகக் கோப்பை 1983, 2011, 3 முறை டி20 உலகக் கோப்பை 2007, 2024, 2026 மற்றும் 3 முறை சாம்பியன்ஸ் டிராபி பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்தியாவைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் 5 கோப்பைகளுடன் மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை தலா 3 கோப்பைகளுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. குறிப்பாக, சமீபத்திய ஆண்டுகளில் இந்திய அணி வெளிப்படுத்தி வரும் சிறப்பான ஆட்டம், ஐசிசி தரவரிசையில் இந்தியாவை ஒரு வலுவான சக்தியாக நிலைநிறுத்தியுள்ளது.