அகமதாபாத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 இறுதிப்போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து ரன் மழையைப் பொழிந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியுள்ளது. அபிஷேக் ஷர்மா சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் மற்றும் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் நிலைகுலைந்து போயினர். மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாகப் பறக்கவிட்டு இந்திய அணி வலுவான நிலையை அடைந்துள்ளது.

​தற்போது நியூசிலாந்து அணி வெற்றி பெற 256 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஓவருக்கு சராசரியாக 12.8 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து வீரர்கள் களமிறங்க உள்ளனர். இந்தியப் பந்துவீச்சாளர்கள் இந்த இமாலய இலக்கைத் தற்காத்து, இந்திய அணிக்குக் கோப்பையைப் பெற்றுத் தருவார்களா என்ற பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.