தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான குடும்பப் பிரச்சினை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எஸ்.வி.சேகர் இதுகுறித்து மிகக் காரசாரமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். “சங்கீதா இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கக் கூடாது;
அதற்குப் பதிலாகப் போலீஸ் நிலையத்திற்குச் சென்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்திருந்தால், இந்நேரம் விஜய் கைது செய்யப்பட்டிருப்பார்” என அவர் வெடிகுண்டைப் போட்டுள்ளார். சொந்த வீட்டின் பிரச்சினையையே தீர்க்கத் தெரியாதவர், எப்படித் தமிழகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பார் என்று கேள்வி எழுப்பியுள்ள எஸ்.வி.சேகர், ஒரு நடிகையுடன் தொடர்பு வைத்துக்கொண்டு பொது இடங்களில் அதே நிறத்தில் உடை அணிந்து வலம் வருவது தனிமனித ஒழுக்கமற்ற செயல் என்றும் சாடியுள்ளார்.
சங்கீதாவைத் திருமணம் செய்த பிறகுதான் விஜய்க்கு இத்தனை வசதி வாய்ப்புகள் வந்ததாகவும், தற்போது அவர் நடந்து கொள்ளும் விதம் பெண்களுக்கு மத்தியில் அவருக்குள்ள செல்வாக்கை முற்றிலுமாகப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
